13.12.2020 உதவி
அன்பு வணக்கம்
இன்றைய தினம் மனிதநேய உதவியாக, மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின், பாடசாலை செல்லும் 8 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த நடராசானந்தபுரம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகும். இதற்கு எமக்கு உதவியவர் திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவரும், தற்போது வவுணதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆக கடமை புரியும் திரு.ஜெகன் அவர்களாகும். நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய இந்த உதவியை புரிந்தமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
13.12.2020
K.S. JekamK.S. Jekam
Comments
Post a Comment