Posts

Humanity Anbaalayam

 அன்பு வணக்கம் இன்றைய தினம் தனது 66வது பிறந்த தினத்தை கொண்டாடும், திருமதி. Sharmila Akilan  அவர்களின் அன்பு தாயார், திருமதி Mahadeva kiruhaspathy அம்மாவுக்கு , எமது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன், என்றும் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கல்லடியில் அமைந்துள்ள விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, மூன்று நேர விசேஷ உணவினை வழங்க உதவியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். Happy birthday இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்  10.09.2021 வெள்ளிக்கிழமை Humanity Anbaalayam Humanity Anbaalayam Humanity Anbaalayam

Humanity Anbaalayam

 அன்பு வணக்கம் 'கல்விக்கு உதவும் மனிதாபிமான பணியில் 19.12.2020 அன்று, மட்/ம. மே/தாண்டியடி அ. த. க பாடசாலையில் கல்வி பயிலும் 122 மாணவர்களுக்கு, The Right One e. V Germany அமைப்பின் 82,000 ஆயிரம் ரூபாய் நிதியின் ஊடாக அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோடு, நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய இந்த உதவியை புரிந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். Humanity Anbaalayam Humanity Anbaalayam Humanityanbaalayam@gmail.com Humanityanbaalayam.blogspot.com 0094779183272 Mobile Number 0094779183272 What's App, Viber Number 'மனித நேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம்'

16.12.2020

 அன்பு வணக்கம் இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின் பாடசாலை செல்லும், உயர்தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவர்களுக்கு தற்போது லண்டனில் வசிக்கும் , திருமதி. Vanitha Vani அவர்களின் நிதி உதவியின் மூலமாக, அப்பியாச கொப்பிகள் வழங்கி வைத்தோம். கல்விக்கு உதவும் பணியில் எமக்கு உதவிய நல்ல உள்ளத்திற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 16.12.2020 மனிதநேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம். Humanity Anbaalayam Humanity Anbaalayam

16.12.2020

 அன்பு வணக்கம் இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு குடும்பத்தின் பாடசாலை செல்லும் 18 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைத்தோம். இதற்கு எமக்கு உதவியவர் சகோதர இனத்தை சேர்ந்தவர் என்பதோடு, தேவைப்படும் நேரத்தில் எமக்கு பல உதவிகளை செய்து வருவதோடு கல்விக்கு உதவும் எமது பணிக்கு உதவி வழங்கியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 16.12.2020 மனிதநேயத்துடன் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு உதவிடுவோம். Humanity Anbaalayam Humanity Anbaalayam

Humanity

 அன்பு வணக்கம் இன்றைய தினம் 2020ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தரத்திற்கான புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற 3 மாணவர்களை பாராட்டி கெளரவிப்பும் செய்ததோடு பரிசில்களும் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த நடராசானந்தபுரம் கிராமங்களில் உள்ள மாணவிகள் ஆகும். 13.12.2020

13.12.2020 உதவி

 அன்பு வணக்கம் இன்றைய தினம் மனிதநேய உதவியாக, மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின், பாடசாலை செல்லும் 8 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த நடராசானந்தபுரம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகும். இதற்கு எமக்கு உதவியவர் திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவரும், தற்போது வவுணதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆக கடமை புரியும் திரு.ஜெகன் அவர்களாகும். நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய இந்த உதவியை புரிந்தமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 13.12.2020 K.S. JekamK.S. Jekam

13.12.2020 உதவி

 அன்பு வணக்கம் இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின், பாடசாலை செல்லும் 35 மாணவர்களுக்கு, தமது கல்வியை திறம்பட கற்பதற்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தைச் சேர்ந்த நடராசானந்தபுரம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகும். இவர்களுக்கு உதவியவர் திரு.  Jeyakumar Thirunavukarasu அவர்களாகும். எனவே தற்போதைய நிலமையறிந்து உதவிய நல்ல உள்ளத்திற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.  13.12.2020