Posts

Showing posts from November, 2020

Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே மிகவும் தேவைப்பாடு உடைய கஷ்ரத்தின் மத்தியில் வாழ்கின்ற குடும்பத்தினரின், பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு, 2021ம் ஆண்டுக்கு பாடசாலைக்கு போவதற்கு தேவையான அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள் பைகள், பாதணிகள் வாங்குவதற்குரிய வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவ முன் வாருங்கள். வருகின்ற மாதத்தின் அதாவது மார்கழி மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும். முடிந்தவர்கள் உண்மையில் இவர்களுக்கு உதவ முன் வாருங்கள். "அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்" Humanity Anbaalayam Humanityanbaalayam@gmail.com 0094779183272 Mobile Number 0094779183272 What's App, Viber Number Humanityanbaalayam.blogspot.com

Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே கிழக்குப் பல்கலைக்கழகத்தில், 2ம் வருடத்தில், விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கன்னங்குடா குடா கிராமத்தைச் சேர்ந்த மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தின் மாணவருக்கு, நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய,கற்றலுக்கான மாதாந்த உதவித் தொகை 8000 ஆயிரம் ரூபாய் கடந்த மாதத்தில் இருந்து வழங்கி வருவதோடு, நாளை மாதாந்த உதவித் தொகை வழங்க உள்ளோம். இந்த மாணவனின் கற்றலுக்கான உதவியை வழங்குபவர், மனிதநேய செயற்பாட்டாளர் திருமதி. Sinthuja Thiyagarajah  அம்மா அவர்களாகும். எனவே இந்த மாணவனின் நிலமையறிந்து உதவி புரியும் திருமதி. Sinthuja Thiyagarajah அம்மாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 27.11.2020

Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே இன்றைய தினம் மனிதநேய உதவியாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, மிகவும் தேவைப்பாடு உடைய 12 குடும்பத்தினருக்கு 2080 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகள் வழங்கி உள்ளோம். இதற்கு எமக்கு உதவியவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் திருமதி. Sharmila maha அவர்களாகும். எனவே நாம் கேட்ட உடனே 25000 ஆயிரம் ரூபாய் நிதியினை தற்போதைய நிலமையறிந்து உதவிய, மனித நேய செயற்பாட்டாளர் திருமதி. Sharmila maha நல்ல உள்ளத்திற்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 17.11.2020

Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே, இன்றைய தினம் நாம் ஆரம்பித்து கற்பித்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாவலடி கிராமத்தைச் சேர்ந்த , அறநெறி பாடசாலை மாணவர்கள், இந்த வருடம் நடந்த 5ம் தரத்திற்கான புலமைப்பரீட்சையில் தோற்றிய 6 மாணவர்களில், 2 மாணவிகள் 165, 171 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்ததோடு, பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் சிறந்த பெறு பற்றினை பெற்றதுக்கு அமைய, அவர்களை பாராட்டி கெளரவிப்பும் செய்ததோடு, சிறப்பு பரீசில்களும் வழங்கி வைத்தோம். இவர்கள் மேன்மேலும் கல்வியில் சிறந்த விளங்க குரு அருளும், இறை அருளும் என்றும் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறோம். இதற்கு எமக்கு நிதி உதவி புரிந்தவர்கள் ஜேர்மனியில் இயங்கும் "வெற்றி விதைகள் அமைப்பினர்கள் என்பதோடு, அனைவருக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். " அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும் " 19.11.2020 VictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation VictorySeeds-Foundation NanbargalVictorySeeds-Foundation Nan...

Humanity

 அன்பு வணக்கம் உறவுகளே, இன்றைய தினம் மனிதநேய உதவியாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அன்றாடம் கூலி வேலை செய்யும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, மிகவும் தேவைப்பாடு உடைய 15  குடும்பத்தினருக்கு உலர் உணவுகள் வழங்கி வைத்தோம். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, புதுமண்டபத்தடி நடராசானந்தபுரம் கிராமத்தில் உள்ளவர் களாகவும். இதற்கு எமக்கு உதவியவர், மட்டக்களப்பைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் திருமதி. Gayathiri தினேஷ் குடும்பத்தினராகும். நாம் கேட்டுக் கொண்டதற்கு அமைய, இந்த மனிதாபிமான உதவியை புரிந்த திருமதி. Gayathiri தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அம்மா, அப்பா மற்றும் அவரது தம்பி அவர்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம். 20.11.2020 Gayathiry Dinesh

Humanity

 அன்பு வணக்கம்  நாம் மிகவும் தேவைப்பாடு உடைய கஸ்ரத்தின் மத்தியில் வாழ்கின்ற குடும்பத்தினருக்கு மனித நேயத்துடன் முடிந்தவர்கள் மூலமாக உதவி செய்து வருகின்றோம். எமக்கு எந்த விதமான எதிர் பார்ப்புகளும் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதோடு, எமது சகோதரன் சகோதரி தற்போது கஷ்ரத்தின் மத்தியில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுகிறோம் என்கின்ற மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகளை செய்து வருகின்றோம். மிகவும் தேவைப்பாடு உடைய மாணவர்களுக்கு, திறமைகளை இனம் கண்டு முடிந்த வரைக்கும் கல்வியை திறம்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றோம். எமக்கு மிகவும் அதிகமான தேவைப்பாடுகள் உள்ளது. முடிந்தவர்கள் எம்மிடம் இணைந்து இந்த உதவிகளை செய்ய முன்வாருங்கள்.  01.அப்பியாச புத்தகங்கள்  02.புத்தகப் பை 03.பாதணிகள்  04.கற்றல் உபகரணங்கள்  05.துவிச்சக்கர வண்டிகள்  06.உலர் உணவுகள்  07.வாழ்வாதாரம்.  08.போசாக்கு பிரச்சனை. (சத்துள்ள உணவுகள் இல்லாமை). இன்னும் பல தேவைப்பாடுகள் உள்ளது. *உங்கள் குடும்பத்தினரின் விஷேட தினங்களில் மிகவும் தேவைப்பாடு உடையவர்களுக்கு...