Humanity
அன்பு வணக்கம் உறவுகளே
இன்றைய தினம் மனிதநேய உதவியாக மிகவும் தேவைப்பாடு உடைய குடும்பத்தினரின் பாடசாலை செல்லும் 6 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தோம். இந்த உதவியை பெற்றவர்கள் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி கிராமத்தில் உள்ள நடராசானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
இந்த மாணவர்களின் நலன் கருதி உதவியவர் தற்போது மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆக, கடமை புரியும் திரு. சந்திரகாந்தன் என்பதோடு, இவர் எம்மோடு தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புவதோடு, தன்னால் முடிந்த உதவியை தற்போது செய்தமைக்கு, மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகிறோம்.
05.12.2020
Comments
Post a Comment